மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 23 August 2017

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி





                பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மற்றும் சிற்பிபாமா அறக்கட்டளை இணைந்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (23.08.2017) நடத்தின. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் பேராசிரியர் கே. ரபி அகமது அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். திருநெல்வேலி தமிழ் முழக்கப் பேரவை உறுப்பினர் தேசிய நல்லாசிரியர் முனைவர் சு. செல்லப்பா முன்னிலை வகித்தார்.


                சிற்பி பாமா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. சிற்பி பாமா அவர்கள் அறிமுகவுரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கல்லூரிக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கினார். அதை பொறுப்பு முதல்வர் பேரா. கே. ரபி அகமது பெற்றுக் கொண்டார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் மு. சித்தி ஜமீலா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சி. சுதாகர் “வயது முதிர்வில் அறிவியல் உண்மை” என்ற தலைப்பில் நிழற்படம் மூலம் விளக்கி சிறப்புரையாற்றினார். 



                தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் திரு. காஜா முஹைதீன் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் எம்.ஐ. ஜாஹீர் ஹுசைன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பேரா. ரம்லத் சபுரா, பேரா. தமீம் அசாருதீன், முனைவர் ஆஷா ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியை மூன்றாமாண்டு விலங்கியல் துறை மாணவி பால சரஸ்வதி தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment