நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் ராயப்பன்ரவி. இவருடைய மனைவி பிரிடாராணி (வயது 42). இவர் நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிஅலுவலக வளாகத்தில் வியாழக்கிழமையன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, நான் ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒருதனியார் தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக அந்த பள்ளி மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம்நடத்தி வந்த மற்றொரு அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பணி ஒதுக்கும்படி கேட்டேன்.ஆனால் பள்ளியில் காலிப்பணியிடம் இருந்தும் எனக்கு பணி ஒதுக்கவில்லை.
இதனால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்தேன். அப்போது சம்பந்தப்பட்ட பள்ளியில் காலிப்பணியிடம் இருந்தால் அந்த பணியை எனக்கு ஒதுக்கலாம் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. எனவே அந்த பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்து எனக்கு ஆசிரியை பணி ஒதுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment