நெல்லையில் நடைபெற்ற நெல்லை நகர
பொற்கொல்லர் சங்க 53வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய சரக்கு சேவை வரி விதிப்பு
முறைக்கு நெல்லை நகர பொற்கொல்லர் சங்கம் ஆதரவு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 53வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நெல்லை
டவுண் தங்கமஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைவர் ஆறுமுகநயினார், செயலாளர் நெல்லைக்குமார், பொருளாளர்
சுப்பிரமணியன், துணைத்தலைவர் அசோக்குமார், துணைச்செயலாளர் முத்துகுமார், உதவி
தலைவர்கள் முருகன், பட்டுவேல்முருகன், உதவி செயலாளர்கள் முருகேசன், அசோக்குமார் மற்றும் திரளான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும்
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நெல்லை நகர பொற்கொல்லர்
சங்க உதவி செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment