பாளையங்கோட்டையில் வீட்டு மொட்டை
மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். பாளை., கோட்டூரை சேர்ந்த செய்யது அகமது.ஆட்டோ
டிரைவர். இவருக்கு ஒரு மகனும், சப்ரீன் ஹாஜிரா ( 12) என்ற மகளும் இருந்தனர். சப்ரீன் ஹாஜிரா பாளையில் உள்ள ஒரு தனியார்
மெட்ரிகுலேசன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
திங்கள் கிழமையன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே
வந்த சப்ரீன் ஹாஜிரா, அருகில் உள்ள வீட்டின் மாடிப் படியில் ஏறி மொட்டை மாடிக்கு
சென்றார். அதிகாலை என்பதால், அவர் மாடிக்கு சென்றதை யாரும் கவனிக்க வில்லை. மொட்டை மாடியில்
இருந்து திடீர் என்று அவள் கீழே குதித்தாள். அவளது அலறல் சத்தம் கேட்டு வீட்டில்
உள்ளவர்களும், அருகில் உள்ளவர்களும் ஓடிவந்தனர்.
அப்போது சப்ரீன்ஹாஜிரா ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். மாணவியை
அவரது பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் உடனடியாக மீட்டு பாளை ஐகிரவுண்ட் அரசு
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவள் பரிதாபமாக
இறந்தாள்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு பாளை போலீசார் விசாரணை
நடத்தினர். மேலும் மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு
அனுப்பினர்.
இதில் இறப்பதற்கு முன் தனது சாவுக்கு தான் படிக்கும் பள்ளியின்
குறிப்பிட்ட ஒரு ஆசிரியை தான் காரணம் என எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை
கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே
சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியையிடம் போலீசார் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.



No comments:
Post a Comment