நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேரன்மாதேவி வட்டார குழு தலைவர் ராஜன் தலைமையில்
விவசாயிகள் திரண்டு வந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர்.
அதில், ‘சேரன்மாதேவி வட்டார பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்த பகுதியில் கன்னடியன் கால்வாய் பாசனத்தை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கன்னடியன்கால்வாயில் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

No comments:
Post a Comment