பாளை வடபகுதி பாதாள
மாடன் கோவில் தெருவில் 117 வருடங்களாக அமர்ந்து அருள் பாலித்துவரும் ஸ்ரீ சித்தி
விநாயக பெருமான் கோபுர கலசத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் மற்றும் பரிவார
மூர்த்திகளுக்கும் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
நடந்தது.
கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு காலை 11 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகம்,
அலங்கார, தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம்
நடந்தது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனையும் அதனை தொடர்ந்து இரவு
எட்டு மணிக்கு உற்சவ விநாயக பெருமான் வீதி உலா வருதல் நடந்தது.
கும்பாபிஷேக யாக
வேள்வி பூஜையை தச்சநல்லூர் ஸர்வசாதகம் சிவஸ்ரீ வெங்கடாஜலபட்டர் (எ) கண்ணன் பட்டர் நடத்தி
வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை இறைபணி பெரியோர்கள், நண்பர்கள் மற்றும் விழா
கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
சுவாமி தரிசனம் செய்தனர்.


No comments:
Post a Comment