குற்றாலம் சாரல் கோலப்போட்டி,
கொழு, கொழு குழந்தைகள் போட்டி மற்றும் புகையில்லா சமையல்
போட்டிகள் நடந்தது.
குற்றாலம் சாரல்
திருவிழாவினை மேலும் மெருகூட்டும் வண்ணமாக “சாரல் திருவிழாவின் அங்கமாக, குற்றாலத்தில் உள்ள கலைவாணர் கலையரங்கத்தில்
வைத்து ஆறாவது திருநாளான (01.08.2017) நடைபெற்ற
கோலப்போட்டியினை மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. சு. முத்துலெட்சுமி அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட சமூக
நல கண்காணிப்பாளர் திருமதி. முத்தரசி அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இதில் மொத்தம் 86 பெண்கள் கலந்து கொண்டனர். சிறந்த கோலத்தை
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த முனைவர். திருமதி. சண்முகக்கனி
உதவி பேராசிரியர் திருமதி. சாந்தி ஆகியோர் தேர்வு செய்தனர். இதில்
ஆயிரப்பேரியை சேர்ந்த திருமதி. காளியம்மாள் முதல்
பரிசையும், கீழப்பாவூரை
சேர்ந்த திருமதி. இந்திரா இரண்டாம் பரிசையும் ஆயிரப்பேரி சேர்ந்த திருமதி. கோகிலா
மூன்றாம் பரிசையும் வென்றார்கள்.
அதனை தொடர்ந்து
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 முதல் 36
மாத குழந்தைகளுக்கான கொழு, கொழு குழந்தைகள்
போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை வடகரை அரசு மருத்துவர் முகம்மது இப்ராஹிம்
அவர்கள் சிறந்த குழந்தைகள் ஆரோக்கிய நிலையை வைத்து முதல், இரண்டாம், மூன்றாம்
இடங்களை தேர்வு செய்தார்கள். இதில் மொத்தம் 20 குழந்தைகள் கலந்து கொண்டனர். தாய்மார்களிடம்
தாய்பால் கொடுக்கப்பட்ட விபரம், தடுப்பூசிகள்,
தன்சுத்தம் மற்றும் வயிற்றுப்போக்கின்
போது குழந்தைகளை எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பது பற்றியும் கேள்விகள் கேட்டு
தகுந்த பரிந்துரைகள் தந்தனர். இதில் முதல் பரிசை கீழப்பாவூரை சேர்ந்த விநாயசெல்வி
அவர்களின் 12 மாத குழந்தை
விஹாசினி வென்றார். இரண்டாம் பரிசை காசிமேஜர்புரத்தை சேர்ந்த செல்வராணி சுப்பையா
அவர்களின் 11 மாத குழந்தை
அமுதன் மற்றும் மூன்றாம் பரிசை குற்றாலத்தை சேர்ந்த சத்தியஜோதி இசக்கிராஜ்
அவர்களின் 11 மாத குழந்தை
ஸ்ரீஜா ஆகிய குழந்தைகள் வெற்றி பெற்றார்கள். இப்போட்டியினை மாவட்ட திட்ட
அலுவலர்கள் திருமதி. விஜயலெட்சுமி, திருமதி. சரஸ்வதி,
திருமதி. ராஜலெட்சுமி மற்றும் திருமதி. சந்திரா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தனர்.
பின்னர் பாரம்பரிய
(புகையில்லா சமையல்) உணவு திருவிழா நடைபெற்றது. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும்
பரிசுகள் வழங்கப்பட்டது.
குற்றாலம் கலைவாணர்
கலையரங்கில் வைத்து மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. சு. முத்துலெட்சுமி அவர்கள்,
திருநெல்வேலி மாநகராட்சி நகர்நல அலுவலர்
மரு. பொற்செல்வன் அவர்கள், கோலப்போட்டி
மற்றும் கொழுகொழு குழந்தைகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை
வழங்கினார்கள். அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி. எப்.
சாந்தி குளோரி எமரால்டு அவர்கள், வேளாண்மை உதவி
இயக்குநர் செங்கோட்டை திரு. நல்லமுத்து ராஜா, மரு. சரவணன், மரு.தனபாலன், கீழப்பாவூர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்
திருமதி.சரஸ்வதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment