மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 12 August 2017

நெல்லையில் பெண்களுக்கான கூடைபந்து போட்டி




நெல்லையில் மின்னொளி பெண்களுக்கான முதலாவது அகில இந்திய கூடைபந்து போட்டி நெல்லை மதிதா இந்து மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது இப்போட்டி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறுகிறது வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் தென்னக இரயில்வே சென்னை அணியும் கேரளா போலிஸ் அணியும் மோதின முதலாவது போட்டியினை மாநகர போலிஸ் கமிஷ்னர் கபில்குமார்சரத்கர் துவக்கி வைத்தார்.

 இப்போட்டியில் தென்னக இரயில்வே சென்னை அணி 64:55என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியினை நான்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் துவக்கி வைத்தார் இப்போட்டியில் கேரளா மின்வாரியம் திருவனந்தபுரம் அணியும் தென் மத்திய செகந்திராபாத் அணியும் மோதின இதில் கேரளா மின்வாரியம் திருவனந்தபுரம் அணி 68:64 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

 மூன்றாவது நடைபெற்ற போட்டியில் சதீஸ்கர் மாநில அணியும் அரைஸ் ஸ்டீல் சென்னை அணியும் மோதின இதில் சதீஸ்கர் அணி 77:58 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஹரிதா நினைவு சுழற்கோப்பையும் பரிசுத்தொகையும்  வழங்கப்படவுள்ளது போட்டி வரும் 15ம்தேதி வரை நடைபெறவுள்ளது

No comments:

Post a Comment