வண்ணார்பேட்டை பிரான்சிஸ்
சேவியர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று கிராம மக்களுடன் கலந்துரையாடி அவர்கள் வாழும்
சூழ்நிலையை தெரிந்து கொள்வதோடு தன்னால் முயன்ற உதவிகளையும் செய்வதற்காக “எப்.எக்ஸ்.
பொறியியல் கல்லூரி – கிராம மேம்பாட்டு பணித்திட்டம்” என்ற
அமைப்பினை உருவாக்கி ஒவ்வொரு துறை மாணவர்களும் கிராமங்களை சந்திக்கும் பணியினை
சிறப்புடன் ஆரம்பித்துள்ளனர்.
இப்பணியின்போது கிராம மக்கள் வீடுகளில் பழுதடைந்திருக்கும் மின்னியல்
பொருட்கள் இயந்திரங்கள், கணிப்பொறி, கட்டிட பழுது பார்த்தல் போன்ற பணிகளை செய்து
வருகிறார்கள். இந்த திட்டத்தின் ஒரு
அம்சமாக மேலாண்மைத்துறை மாணவர்கள் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் அன்பு இல்லத்தில்
பயிலும் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை சந்தித்து,
கலந்துரையாடி, பரிசுகளும் இனிப்புகளும் வழங்கி அவர்களை
மகிழ்வித்தனர். அப்போது பல்வேறு
விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தியபோது சக்கர நாற்காலியில்
மட்டுமே அமர்ந்து உலாவக்கூடிய மாணவர்களுக்கும் பந்து எறிதல்,
லெமன் மற்றும் ஸ்பூன் போட்டிகள் நடத்தி அவர்களை மகிழ்வித்தனர். சக்கர நாற்காலியில் மட்டுமே அமர்ந்து இருக்கும்
அவர்களுக்கு இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது மிகவும் உற்சாகம்
அளித்ததாக அவர்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும்
நடத்தி மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தினர்.
இவ்விழாவில் ஸ்காட் நிறுவன பொது மேலாளர்கள் திரு.தம்பிதுரை மற்றும்
திரு.இக்னேஷியஸ் சேவியர் ஆகியோர் கலந்து
கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு
பரிசுகளை வழங்கினர் . பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.இளங்கோவன் தலைமை
வகித்தார். கல்லூரியின் நிர்வாக அதிகாரி
திரு.எஸ்.கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவினை மேலாண்மைத்துறை
பேராசிரியர்கள் திருமதி ஸ்டெல்லா, திருமதி தனலட்சுமி மற்றும்
செல்வி. புகழ் ஆகியோர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்கள்.


No comments:
Post a Comment