மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 11 August 2017

தூத்துக்குடியில் போலீஸாரை கண்டித்து கடையடைப்பு நடத்த முடிவு



தூத்துக்குடியில் பிரதான பகுதியான அண்ணாநகரில் 09-8-17 அன்று இரவு சரியாக 10:50 மணிக்கு அனைத்து வியாபாரிகளும் கடையை அடைக்கும் வேளையில் தென்பாகம் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி அண்ணாநகரில் உள்ள அனைத்து வியாபாரிகளிடமும் கைபேசியை வாங்கி சென்றுள்ளார். அவரோடு வந்த பிரண்ட்ஸ் ஆப்கள் இருவர் வியாபாரிகளிடம் தரம் இல்லாத வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கொதிப்படைந்த வியாபாரிகள் அனைவரும் ஒன்றாக திரண்டனா். நேற்று  10-8-2017 அன்று முழு கடையடைப்பு நடத்தபோவதாக முடிவு எடுத்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி உதவி கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வியாபாரிகளை அழைத்து பேசி காலை தென்பாகம் காவல் நிலையத்தில் கைபேசியை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று 10-8-2017 இரவு 8:30மணி அளவில் அண்ணாநகர் 7வது தெருவில் உள்ள தங்கம்மாள் பள்ளியில் வியாபாரிகள் கூட்டம் நடந்தது.

இதில் வியாபாரிகளிடம் காவல்துறை மோதல் போக்குடன்  கடுமையாக நடந்து கொள்வதை கைவிட வேண்டும், கைபேசியை பறித்துசென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை கண்டிக்கவேண்டும் மற்றும் பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கிடவும்  இதன் பிறகும் வியாபாரிகள் அவமதிக்கப்பட்டால் மோதல் போக்கு தொடா்ந்தால் தூத்துக்குடியில் கடையடைப்பு மற்றும் பல போராட்டங்களை நடத்தப்படும் என்று ஒரு மனதாக முடிவுயெடுக்கப்பட்டதாக அண்ணாநகா் வியாபாரிகள்  தெரிவித்துள்ளனா்.



No comments:

Post a Comment