கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் விழா ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் விழாவை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையை சுத்தப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்துல் கலாம் நண்பர்கள் குழு அமைப்பினர் தொடங்கினர்.
இதையடுத்து தாமிரபரணி ஆற்றின் தென்பகுதிக்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள், கழிவுகள், அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. அந்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசின் உத்தரவின்படி தாமிரபரணியில் ஆய்வுப் பணிகள் நடைபெறும் திட்டம் உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் ஆற்றின் அமைப்புடன் தற்போதுள்ள நதியின் தன்மைகளை ஒப்பிட்டு வெள்ளத் தடுப்புநடவடிக்கை எடுக்க உள்ளோம். இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலைக்கு நதியை கொண்டு வரலாம். இந்த நதி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு ஆதாரமாக உள்ளது. இந்த நதியில்மாசுப்படுத்தும் போது இதை மனதில் கொண்டால் மாசுபடுத்த மனம் வராது. மேலும் இந்த தூய்மைப் பணியை இத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் தொடங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் 170 மரக்கன்றுகள் நடப்பட்டன.

No comments:
Post a Comment