மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday 26 December 2017

சாந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா,



பாளை சாந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடும் வகையில் வாலிப பெண்களின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. 



நிகழ்ச்சிக்கு Rev Dr.S.A.C.R.   டேனியல் தலைமை வகித்தார். இக்கலை நிகழ்ச்சி ஜெபத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து  பெண்களின் நாடகங்கள், பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.

 இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சபையின் மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.




சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.




பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்  (20.12.2017) காலை 11 மணியளவில் கல்லூரி வளாகத்தில் வைத்து சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டம், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.  அரசுதவி பெறா பாடப் பரிவின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர், முன்னிலை வகித்தனர். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதய கிளை மேலாளர் ஏ. வேல் முருகன், பணி நிறைவு பெற்ற நல்லாசிரியர் மு. சண்முக சுந்தரம் மற்றும் டி. செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


சதக்கத் கிராம மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. முனைவர். சேக் முஹைதீன் பாதுஷா, பேரா. முகம்மது இம்ரான், சதக்கத் கிராம மேம்பாட்டு திட்ட அலுவலர்  செல்வி. ஆ. ரம்யா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேரா. எம். சாகுல் ஹமீது, பேரா. அப்துல் காதர், பேரா. ஜெமி மெர்லின் ராணி, பேரா. ஜெஸ்லின் கனக இன்பா, பேரா. பிரேம லதா, பேரா. முகம்மது யஹ்யா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.


Thursday 21 December 2017

FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்



நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் துறை சார்பாக காங்கிரீட் கலவை விகிதம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு கல்லூரியின் கட்டடவியல் துறையின் சார்பாக கல்லூரி மாணவ மாணவியருக்கு நடைபெற்றது.  

முனைவர் கண்ணன் வரவேற்புரையாற்றினார்.  தலைமை விருந்தினராக  கல்லூரி முதல்வர் முனைவர் வி.இளங்கோவன் கலந்து கொண்டார்.  சிறப்பு விருந்தினராக  ருவசய  வுநஉh ஊநஅநவெள  பாண்டிச்சேரி கிளையின் மேலாhளர் திரு.கே. சுபாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாhர்.  

தனது சிறப்புரையில் காங்கிரீட் கலவை தயாரிப்பதில் பல்வேறு வகைகள், முறைகள்; மற்றும் பயன்பாடுகள் பற்றி விளக்கமாக கூறினார்..   சிறப்பாக காங்கிரீட் தயாரிப்பு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.  

இறுதியில கல்லூரி பேராசிரியை முனைவர் ஏஞ்சலீனா நன்றியுரையாற்றினார்.  இதற்கான ஏற்பாடுகளை  கட்டடவியல் துறை  பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை



பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில்  தூயதோமா ஆலய விஸ்திரிக்கப்பட்ட கோபுரம் பிரதஷ்டை விழா நடைபெற்றது. 

மத்திய சபை மன்ற தலைவர் பீட்டாதேவதாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பேராயர் காந்திசெல்வின் ஜெபம் செய்தார். இந்நிழ்ச்சியில் குருமார்கள் சிம்சோன் சிகாமணி, கே.என்.ஜேசுதாசன், ஆர்.எஸ்.ஜோசப், ராஜசேகரன், பிரேம்ஜோன்ஸ், டேவிட்சாமுவேல், டீக்கன்ராஜ்குமார், சேகர கமி;ட்டி அங்கத்தின் செயலர் எட்வர்ட்ஜான், கன்வீனர் டாக்டர் ராபர்ட் தாசன், ஜான்சன், மற்றும் கமிட்டி அங்கத்தினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 


அதை தொடர்ந்து 48வது அசன பண்டிகையில்; சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பேராயர் பில்லி, லே.செயலர் வேதநாயகம், ஞானராஜ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற அசன விருந்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சேகர குருவானவர் முத்துராஜ் சிறப்பாக செய்திருந்தார்.

செய்தி மற்றும் படம்.
திரு.முத்து. 



Wednesday 20 December 2017

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் பாராட்டு.



சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர்  திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.

திருநெல்வேலி சதக்கத் துல்லாஹ் அப்பா கல்லூர தமிழ்த்துறைப்     பேராசிரியை முனைவர். இரா.அனுசுயா அவர்கள் "புறம் பாடிய  பூவையர்" 
என்ற தலைப்பில் மலேசியா பென்டிக்கன்  சுல்தான் இட்ரீசு  கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு  கருத்தரங்கில் கலந்து  கொண்டு கட்டுரை வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக  கோலாலம்பூர் எஸ்.ஜே.கே. தமிழ் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேராசிரியைக்குப்  பாராட்டும்  நினைவுப் பரிசும்  வழங்கப்பட்டது.

அவர்களை கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இளைஞர் நலத்துறை பாராட்டி வரவேற்கிறது.

செய்தி மற்றும் படம்.
திரு.சரவணவேல்.


Monday 18 December 2017

வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா




அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பாக நெல்லையில் வரும் அக்டோபர் 2018ல் 12நாட்கள் தாமிரபரணி நதிக்கு மஹாபுஷ்கர விழா நடைபெற உள்ளது என அகில பாரத துறவியர்கள் சங்க செயலர் சுவாமி ராமானந்தா நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 வரும் 2018ம் ஆண்டு குரு பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்கு குரு மாறும் பொழுது அதி தேவதையாக விளங்க கூடிய தாமிரபரணி நதிக்கு மஹாபுஷ்கர விழா நடைபெறுகிறது இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சியாகும். (அதாவது 1212) இதை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு புஷ்கர விழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து சிருங்கேரி ஜெகத்குரு மஹா சன்னிதானம் 12நாட்கள் புஷ்கர விழாவை நடத்த ஆசியுரை வழங்கியுள்ளார். 

இதனை முன்னிட்டு பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து குறிப்பாக தென்மாநிலங்களில் இருந்து 1கோடிக்கும் மேல் பக்தர்கள் புனித நீராடுவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்படடு வருகிறது. இந்த விழாவில் சங்கராச்சாரியார்கள், ஆதினங்கள், மடாதிபதிகள், துறவிகள், என நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தர உள்ளார்கள். 

இதனையொட்டி துறவியர்கள் மாநாடு, ஊர்வலம், சதுர்வேதபாராயணம், திருவாசக முற்றோதுதல். சைவமாநாடு, நாலாயிரம் திவ்யபிரபந்த பாராயண வைணவ மாநாடு, போன்றவைகள் 12நாட்கள் தாமிரபரணி நதி படித்துறைகளிலும் மஹா ஆரத்தி, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. துமிழக அரசு தாமிரபரணிக்கு சிறப்பு செய்கின்ற விதத்தில் அரசு விழாவாக கொண்டாட முன்வர வேண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகின்ற படித்துறைகள் அனைத்தும் சீர் அமைத்து பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும்.

 மேலும் உடை மாற்றும் அறை, கழிவறை, சிறப்பு பேருந்து மற்றும் இரயில் வசதிகளை ஏற்படுத்திடவும், பாபநாசத்தில் தாமிரபரணி மாதாவின் திருவுருவ சிலை நிறுவ வேண்டும் என கூறினார்.

செய்தி மற்றும் படம்.
திரு.முத்து.

நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்





நெல்லையில் கந்துவட்டி கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 4பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் கந்து வட்டி குறித்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்தார். 

தொடர்ச்சியாக நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு சட்ட உதவி மைய  நீதிபதி ராமலிங்கம் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கினார். 

இது குறித்து அந்த துண்டு பிரசுத்தில் தெரிவித்திருப்பதாவது: அரசு நிர்ணயிக்கும் வங்கி வட்டி விகிதத்தை மீறி வசூலிக்கப்படும் தினவட்டி, மணிநேர வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி, மற்றும் தண்டல் போன்றவை கந்துவட்டியாகும், ஒரு கடனாளி அதிக வட்டி கொடு;க்க வற்புறுத்தப்படுவாரேயானால், சட்டபடி செலுத்த வேண்டிய கடன் தொகையினை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ நீதிமன்றத்தில் செலுத்தி நிவாரணம் பெற உரிமை உண்டு. நீதி மன்ற கட்டணம் ரூ100மட்டுமே ஆகும். கடனாளியின் சொத்து பறிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றம் அவற்றை மீட்க உத்திரவிடும். செலுத்த வேண்டிய சரியான கடன் தொகையினை நீதிமன்றம் நிர்ணயிக்கும். கடனை வசூலிக்க கடனாளியை துன்புறுத்தினால் அல்லது துன்புறுத்த தூண்டினால் மற்றும் உடந்தையாக இருந்தால் அவர்களுக்கு 3ஆண்டு சிறை தண்டனையும், 30ஆயிரம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட கடனாளிகள் காவல் நிலையத்தில், அல்லது காவல் உயர் அதிகாரிகளிடம், மற்றும் குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்து உரிய நிவாரணம் பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

செய்தி மற்றும் படம்.
திரு.முத்து.


இரு மாநிலங்களில் பாஜக வெற்றி நெல்லையில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்


குஜராத், இமாச்சல் இரு மாநிலங்களில் பாஜக வெற்றி   நெல்லையில் பாஜகவினர்  இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்


குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இருமாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து நெல்லை மாவட்டத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். 

நெல்லை வண்ணார்பேட்டையில் கிழக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் பா.ஜ.கவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலர்கள் சுரேஸ், தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் பாபு, இளைஞரணி மாநில செயலர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலர்கள் கணேஷ்மூர்த்தி, முத்துபலவேசம், இளைஞரணி மாவட்ட தலைவர் ஆவுராஜா, இளைஞரணி மாவட்ட பொதுசெயலர் சிவன்வீரபூபதி, இளைஞரணி மாவட்ட பொருளாளர் விஜய், மண்டல தலைவர்கள் குமரன், ஆனந்தராஜ், நடேசன், அங்குராஜ், இளைஞரணி மாவட்ட செயலர் ஆழ்வார்அசோக், தொழில் நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் வி.பி.முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம்.
திரு. முத்து.

பாளை மகாராஜநகர் ஸ்ரீ மஹாசக்தி ரூப ஆஞ்சநேயருக்கு அபிஷேக பூஜை.




அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பாளை மகாராஜநகர் ஸ்ரீ மஹாசக்தி ரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பாளை மகாராஜநகர் உழவர் சந்தை அருகே உள்ள ஸ்ரீமஹா சக்தி ரூப ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. 

ஆஞ்சநேயருக்கு காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.தொடர்ந்து பால், தயிர், இளநீர், வாசைன திரவியங்கள், சந்தனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்ச நேயரின் அருள் பெற்று சென்றனர். மதியம் அன்னதாம் வழங்கப்பட்டது. 
மாலையில் நெல்லை அருணாசலம் மாணவ-மாணவிகளின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீமஹாசக்தி ரூப ஆஞ்சநேயர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி மற்றும் படம்.
திரு.முத்து.

நெல்லையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கோலாகலம்.




நெல்லை டவுணில் லெட்சுமி மஹாலில் நேற்று எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர் பாடலுடன் பாட்டு கச்சேரி நடைபெற்றது. 

விழாவில் நெல்லை ப.இளமதி, எஸ்.எம்.எஸ்.ஜாலி, பி.எஸ்.ராஜ், ஆழ்வை ராசப்பாசாமி, ஜன்னத் ஹரி, சடகோபன். ராஜா, சங்கர், நம்பிராஜன், குணசேகர், களந்தை ராஜா, மாஸ்டர் செல்வம், முருகன், இரட்டைமுத்து, காசிராஜன், சதக், சுடலை, போர்டர் ஐயப்பன், சேக் மன்சூர், கிட்டு, சுப்பிரமணியன், ஐயப்பன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், 52வது வட்ட செயலர் அப்துல்சமது, ஜாகீர்உசேன், வண்ணைமுத்துராஜ், நவ்சாத், சுப்பையா மற்றும் திரளான அதிமுகவினர் மற்றும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள், மகளிர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம்.
திரு.முத்து.

பாளை மகாராஜாநகர் ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜை



அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பாளை மகாராஜாநகர் ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜை.


அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பாளை மகாராஜாநகர் ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பாளை மகாராஜாநர் உழவர்சந்தை அருகே உள்ள ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை திதியில் ஆஞ்சநேயர் அவதரித்தார். ஆகையால் அந்நாளை மக்களால் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடபடுகிறது. எனவே ராம பக்தரான ஆஞ்சநேயருக்கு நெல்லையில் அனைத்து ராமர் கோவில்கள் பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளில் அனுமன் ஜெயந்தி; கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பாளை மகாராஜாநகர் ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், வாசைன திரவியங்கள், சந்தனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரின் அருள் பெற்று சென்றனர். 

நிகழ்ச்சியில் மதியம் பக்தர்களுக்கு அன்னதாம் வழங்கப்பட்டது. மாலையில் நெல்லை அருணாசலம் அவர்களின் மாணவ-மாணவிகளின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

மேலும் இக்கோவிலில் தினமும் காலை 7மணி முதல் 8.30 மணிவரையிலும், மாலை 6மணி முதல் 8.30 மணி வரை ஒவ்வொரு மாதத்திலும் வரும் மூல நட்சத்திரம் மற்றும் சனிக்கிழமை மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயர் டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


டெங்குவை தடுக்க நவீன கொசு மருந்து அடிக்கும் கருவி : வசந்தகுமார் எம்எல்ஏ., வழங்கல்





டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நவீன கொசு மருந்து அடிக்கும் கருவியை வசந்தகுமார் எம்எல்ஏ., வழங்கினார்.சமீப காலமாக நெல்லை மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் கடுமையான டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

இதில் நெல்லை மாவட்டத்தில் கடைய நல்லுார் மற்றும் ராதாபுரத்தில் சிலர் இறந்துள்ளனர்.இந்நிலையில் நவீன கொசு மருந்து அடிக்கும் கருவியை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மாவட்டஆட்சியர் தலைமையில் தன் தொகுதியான நாங்குநேரியில் வழங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கருவி சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ளதாகும். இதனை வசந்தகுமார் எம்எல்ஏ., தன் சொந்த செலவில் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜை.




அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள் நடைப்பெற்றது. மார்கழி மாதம் மூல நட்சத்திரம், அமாவாசை திதியில் ஆஞ்சநேயர் அவதரித்தார். ஆகையால் அந்நாளை மக்களால் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. 

எனவே ராம பக்தரான ஆஞ்சநேயருக்கு நெல்லையில் அனைத்து ராமர் கோவில்கள், பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி, நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று ஆஞ்சநேயருக்கு காலை சிறப்பு யாகம் நடைப்பெற்றது. தொடர்ந்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், வாசணை திரவியங்கள், சந்தனம், மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீராபதனை நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரின் அருள் பெற்று சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


Saturday 16 December 2017

மலபார்கோல்டு அண்ட்டைமண்ட்ஸ் புதுப்பிக்கப்பட்ட திருநெல்வேலி ஷோரூம் திறப்பு



திருநெல்வேலிஎஸ்.என். நெடுஞ்சாலையில் உள்ள மலபார்கோல்டு அண்ட்டைமண்ட்ஸ் நிறுவன ஷோரூம் அதிக இட வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூம் சனிக்கிழமையன்று 16.12.2017 திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து செல்ல வசதியாக மாற்றப்பட்டுள்ள இந்த ஷோரூமில் ஏராளமானதங்கம், வைரம், பிளாட்டினம், மற்றும் வெள்ளி நகைகளின் தொகுப்புகள் உள்ளன. திறப்பு விழாவினை செல்வி. மெர்லின் மற்றும் செல்வி. விபிஷா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். ஜிமிக்கி பிரிவினை கல்யாணி பொன்னுத்தாய், ஆறுமுக பாண்டியன் மற்றும் டாக்டர். ஜோஷிதா தாஸ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். ஆண்களுக்கான பிரத்யேக பிரிவினை சுந்தர், ஆருமுகபாண்டியன், ராமசாமி ராஜா மற்றும் ஐயப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். கிளச்ட்டார் ஹெட் அமீர்பாபு மற்றும் ஷோரூம் துணைத்தலைவர் வகாட் தலைமையில் கேக் வெட்டினர். நிறைவாக எபனேசர் நன்றி கூறினார். 


தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகால குறிப்பிட்ட நகைகளை தவிர இந்த ஷோரூமில் மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தனித்துவம்வாய்ந்த நகை வகைகள் கிடைக்கும். குறிப்பாக இந்திய பாரம்பரிய நகைகளை குறிக்கும் டிவைன்,  வெட்டப்படாத வைர கற்களால் ஆன எரா,  மைன்என்ற பெயரிலான வைர நகைகள், கைவினைக்கலைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட எத்தினிக், குழந்தைகளுக்கான ஸ்டார்லெட், பிரிசியா எனப்படும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட நடைகள் கிடைக்கும்.

புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூம் அதிக இடவசதி கொண்டதாகும். அதிக வாகனங்களை நிறுத்தவும் கண்காட்சி போன்ற இதர நிகழ்ச்சிகளை நடத்தவும் இடம் தாராளமாக உள்ளது. இதனால் எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இங்கு ஷாப்பிங் செய்யும்போது வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். மேலும் உங்களது விருப்பமான ஷாப்பிங் மையமாக இது அமையப்போவது நிச்சயம்.

இந்த சிறப்பான ஷாப்பிங் அனுபவத்துடன் கூடிய மற்றொரு கவர்ந்திழுக்கும் அம்சம் என்னவென்றால் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறக்கப்படுவதால் சேதாரம் 3 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது.

மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால்மார்க் சான்று பெற்ற வெள்ளி நகைகளையும் மட்டுமே விற்பனை செய்கிறது. அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, செய்கூலி, கற்களுக்கான கூலி, அதன் நிகரஎடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு,  ஒராண்டு இலவச காப்பீடு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் என மதிப்புமிக்க சேவையை மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. 


மலபார்கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் வெற்றிகரமான வணிகத்தில் மட்டுமல்ல சமூகப் பொறுப்பு திட்டங்களிலும் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இந்நிறுவனம் தனது லாபத்தில்சிலசதவீதத்தைசுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

சில்லலை நகை விற்பனையில் உலகில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ள மலபார்கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் 9 நாடுகளில் 196 சில்லறை விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.


Thursday 7 December 2017

அக்குபஞ்சரிஸ்ட் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்



நெல்லை சந்திப்பில் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மற்றும் சி.ஐ.ஏ. நெல்லை மண்டல கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு டாக்டர் சி.ஏ.ரவி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் அறிவழகன், மனோஜ், ராஜலிங்கம், அனந்தகிருஷ்ணன், கிருஷ்ணசிவசலபதி. மூக்கையா, ஹரி, மரியதாஸ், உட்பட திரளான அக்குபஞ்சரிஸ்ட் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம் 
திரு.முத்து.


Saturday 2 December 2017

சாந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் வைத்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  

 சாந்திநகர் சேகரத்தின் சார்பாக சாந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் வைத்து மாபெரும் இலவச மருத்துவ முகாம்  நடைபெற்றது.  

சிறப்பு மருத்துவ முகாமில் சந்தோஷ் மருத்துவமனை  எலும்பு முறிவு ,அறுவை  சிகிச்சை  மருத்துவர்  முகேஷ் திருநெல்வேலி ரோஸ்மேரி சிபா மருத்துவமனை  முன்னாள் இருதய நிபுணர் கிரிஸ் தீபக்  மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு  முதுகுவலி , மூட்டுவலி, கழுத்துவலி , நெஞ்சுவலி, நெஞ்சரிச்சல்,  உயர் இரத்த அழுத்தம் , இரத்த குழாய் சுருக்கம் , இருதய மாரடைப்பு உள்ளவர்களுக்கு சிறந்த முறையில் ஆலோசனை மற்றும்  சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.  

வண்ணார்பேட்டை ராஜா மருத்துவமனை சார்பில் நரம்பியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவி தலைவலி, வலிப்பு நோய் , தூக்கமின்மை , பக்கவாதம் போன்ற நோய்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கினர் . 

ஸ்ரீ . கிருபா பல் மருத்துவமனை சிறப்பு பல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன், புவனேஸ்வரி  கோபாலகிருஷ்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு பல் மற்றும் ஈறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கண்டுபிடித்து அதற்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். டைட்டன்  ஐ  பிளஸ் சார்பாக மருத்துவ குழுவினர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர் .  



இலவச மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை செல்வராஜ் மற்றும்  பவுல்ராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.     








செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.


பெண்களுக்கான pink 2017 புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்



திருநெல்வேலி மத்திய ரோட்டரி சங்கம் மற்றும் இன்னர்வில்  கிளப் ஆப் திருநெல்வேலி இணைந்து பெண்களுக்கான  pink 2017 புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது.  

சிறப்பு அழைப்பாளராக காவல்துறை உதவி ஆய்வாளர் சுகுணாசிங்  ரோட்டரி  கவர்ணர்  டாக்டர் சின்னத்துரை அப்துல்லா இன்னர்வில் சேர்மன் வெயிலா K. ராஜா அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி சுத்திய முனைவரா ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.  

நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் யூசுப்ராஜா ,  முன்னாள் உதவி ஆளுநர் மயில் பால சுப்பிரமணியன், இன்னர்வில் தலைவி பாரதிரவி, செயலாளர் கோமதி மாரியப்பன் , மத்திய ரோட்டரி சங்க தலைவர் உலகராஜ் , செயலாளர்  சரவணன் Pink 2017  நிகழ்ச்சி இயக்குநர் AVL துரைகுமார்  மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர் இன்னர்வில்  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .


நிகழ்ச்சியில் முதல் பரிசாக வீரவநல்லூர் St. Johns  உடற்கல்வியல் கல்லூரி மாணவி முத்துமாரி இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினை பாலை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவி C. சுப்புலட்சுமி , மற்றும் P. சுப்புலட்சுமி  ஆகியோர் தட்டி சென்றனர்.

   கலந்து கொண்ட அனைவருக்கும்  சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது .  இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு  அலுவலர் வீரபுத்திரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.        


செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.

தூய சவேரியார் பேராலய ஐந்தாம் திருநாள் திருவிழா



பாளையங்கோட்டை மறைமாவட்டம்  தூய சவேரியார் பேராலய திருவிழா முதல் நாளான (24.11.2017) அன்று கோடியேற்றத்துடன்  துவங்கியது .  மேலும்  (28.11.2017) ஐந்தாம் திருநாள் திருவிழா திருப்பலி காலை  6.00  மணிக்கு நடைபெற்றது.  

அருட்திரு . மோட்ச ராஜன் (திருநெல்வேலி சமூக சேவை சங்கம்) அவர்கள் திருப்பலி மற்றும் மறையுரையினை  வழங்கினார் .  தூய வியாகுல அன்னை கலைமனைகள்  திருபயணிகலாக  வருகை தந்தனர்.  

 மேலும் மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற  திருவிழா திருப்பலியினை  கோவில்பட்டி பங்குத்தந்தை அருட்திரு . A.  பீற்றர்  சிறப்பித்தார்.  நாலாங்கட்டளையை  சார்ந்த பங்குத்தந்தை  அருட்திரு . ஜெகன் ராஜா அவர்கள் மறையுரையினை வழங்கி சிறப்பித்தார்.  ஓசேயா மண்டலம்  சபையைச் சார்ந்த இறைமக்கள் இத்திருப்பலியினை சிறப்பித்தனர்.

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.