திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள ஸ்ரீதுர்கா சீரடி சாய்பாபா ஆலயத்தின் 2ம்ஆண்டு வருஷாபிஷேக விழா ஸ்ரீதுர்கா சீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பாக வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
நெல்லையப்பர் ஆலயத்தில் உள்ள விநாயகர் திருக்கோவிலிருந்து 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் சீரடி பாபா கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து பாலாபிஷேகம் பாபா சிறப்பு ஆரத்தி எடுக்கும் வைபவம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு நெல்லை டவுண்நிருத்யாஞ்சலி நாட்டியாலயாவின் சிவகாமி மது செல்வனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிகிழமையான நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாஏற்பாட்டினை அறக்கட்டளை பொறுப்பாளர் குமரேன் சிறப்பாக செய்திருந்தார். திருக்கோவிலின் வளர்ச்சிக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் 9994118112 என்ற செல்போன் நம்பருக்கு தொடர்ர் கொள்ளவும் என அறக்கட்டளை பொறுப்பாளர் குமரேன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment