மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 1 July 2017

உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியீடு




உள்ளாட்சி தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 பஞ். யூனியன்களின் வாக்காளர் பட்டியலை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட மாநகராட்சி கமிஷ னர் சிவசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 112 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 70 ஆயிரத்து 681 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 68 பேரும் என 25 லட்சத்து 4 ஆயிரத்து 891 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அனைத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று (ஜூலை 1) முதல் 30ம் தேதி வரை 18 முதல் 21 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள், விடுபட்ட வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடக்கிறது. மேலும் ஜூலை 9, 23ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதனை பயன்படுத்தி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.


மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நேர்முக உதவியாளர்கள் வசந்தி (தேர்தல்), தேர்தல் பிடிஓ முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment