அதிமுக ஜெ. தீபா அணி எம்.ஜி.ஆர். அம்மா ஜெ. தீபா பேரவை சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் மதர்
பில்டர் விஜயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்
நெல்லை பகுதி செயலாளர் மணிகண்டன், பாளை செயலாளர் கோட்டூர் பாருக், மானூர் தெற்கு
துணை செயலாளர் நாகராஜன், சங்கர்நகர் நகர செயலாளர் ஹக்கீம், நெல்லை பகுதி துணை
செயலாளர் பேட்டை மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மத்திய மாவட்ட கழக
துணை செயலாளர் அக்பர் அலி வரவேற்புரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு
தொடர்பாளர் முத்து குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தென்மண்டல
பொறுப்பாளர் பசும்பொன் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் தாமிரபரணி
ஆற்றில் கலக்கும் ஆலை கழிவுகளை மறு சுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படும்படி
அரசு நடவடிக்கை எடுக்கவும், திருநெல்வேலி மாவட்டத்தில் 5000
மரக்கன்றுகள் நடுதல், நெல்லையில் அஇஅதிமுக ஜெ.
தீபா அணியின் முதல் மாநில மாநாடு நடத்த ஏற்பாடு செய்தல், 5 லட்சம் உறுபினர்களை
ஓரிரு மாதங்களில் சேர்க்க அரும்பாடு படுத்தல், இலவச ஆம்புலன்ஸ் அமைத்தல், சுற்றுலா
தளம் அல்லது பூங்கா அமைத்தல், உட்பட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர செயலாளர்
சாமி, அருணாச்சலம், ஆசை செல்லத்துரை, பொன்னுசாமி, தெற்கு மானூர் ஒன்றியம்
இசக்கிமுத்து, வாசுதேவநல்லூர் ஒன்றியம் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மத்திய மாவட்ட அவைத் தலைவர் பரணி இசக்கி, இணைச் செயலாளர் சுப்புலட்சுமி
ஆகியோர் நன்றி கூறினர்.

No comments:
Post a Comment