மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Sunday, 2 July 2017

நெல்லையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி.



உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு நெல்லையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

மருத்துவதுறையில் சிறந்து விளங்கிய டாக்டர் பிதான் சந்திரராய் நினைவாக ஆண்டு தோறும் ஜூலை 1ம் தேதி மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்திய மருத்துவ சங்கம் நெல்லை கிளை மற்றும் வண்ணார்பேட்டை ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனை இணைந்து பள்ளி குழந்தைகளுக்கான ஓவியம் மற்றும் பேச்சு போட்டி, ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனையில் நேற்று நடந்தது. ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனை டாக்டர் தன்யா தலைமை வகித்தார்.


அகில இந்திய மருத்துவர் சங்க நெல்லை கிளை நிர்வாகிகள் டாக்டர் ஆதம் அலி, டாக்டர்கள் நிர்மலா, ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியம் மற்றும் பேச்சு போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment