மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 11 July 2017

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை வருகிறது : தமிழக முதல்வர் எடப்பாடி அறிவிப்பு.




தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை ஜூன் மாதம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.


முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சாம்சங் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி 20 மேல்நிலை பள்ளிகள் மற்றும் 8 நடுநிலை பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

No comments:

Post a Comment