அடைக்கலபட்;டணத்தில்
பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார்
தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள
அடைக்கலப்பட்டணம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்பீட்டர் (59). பட்டு
வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள இவர் ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் அருகில்
உள்ள புனிதபவுலின் ஆலயத்திற்கு சென்றாராம். 11 மணியளில் வீடு திரும்பிய போது
வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே பீரோவில் இருந்து 45 கிராம் தங்க நகையும், ரூ.30 ஆயிரம் ரொக்கமும் திருடு போய்
இருந்ததாம்.
இதே போல் அதே தெருவை சேர்ந்தவர்
காலேப்சாமுவேல் (47). சுவிசேசபுரம் கிறிஸ்தல ஆலயத்தில் பங்குதந்தையாக உள்ளார். இவர்
ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு ஆலயத்திற்கு சென்றாராம். திரும்பி
வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 7 கிராம் தங்க நகை
திருடு போய் இருந்ததாம்.
ஒரே தெருவில் அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த
திருட்டு சம்பவங்கள் குறித்து பாவூர்சத்திரம் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி.சங்கு மற்றும் பாவூர்சத்திரம் போலீஸார்
விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை
நிபுணர்களுக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து பாவூர்சத்திரம்
போலீஸார் வழக்கு பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி
வருகின்றனர்.

No comments:
Post a Comment