வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் CBSE பள்ளி மற்றும் தூய சவேரியார்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று “ Rose Day” குதுகலமாகக் கொண்டாடப்பட்டது.
சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணமாக
ஆசிரியர்களுக்கு பலவித வண்ணங்களில் ரோஜாப்பூக்கள் கொடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் பூக்களின்
ராஜாவாம் ரோஜாவைப் பற்றிய பாடல்களை பாடி அனைவரயும் உற்சாகப்படுத்தினர். ரோஜா மலர்
தன் இனிய மணத்தினால் பிறரை மகிழ்விப்பது போல நாமும் நம் நற்செயல்களால் பிறரை
மகிழ்விக்க வேண்டும் என்ற கருத்தையும் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
ஆசிரியர்கள்
குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை
பள்ளி ஹெரிடேஜ் கிளப் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment