நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர்
கலைக் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவு போல் முதுகலை பாடப்பிரிவுக்கும் இடம்
பிடிக்க போட்டி நிலவுகிறது. வரும் 19ம் தேதி முதல் முதுகலை
பாடப்பிரிவு சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்குகிறது.
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர்
கலைக் கல்லூரியில் முதுகலையில் 14
பாடப் பிரிவுகள் உள்ளன. சில
பாடப்பிரிவுகளுக்கு 20 முதல் 30 இடங்கள் வரை மட்டுமே உள்ளன.
2017-18 ம் கல்வயாண்டிற்கு மாணவிகள் சேர்க்கைக்கு கடந்த
வாரம் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
இளங்கலை பாடப்பிரிவுக்கு
இருந்தது போல் முதுகலை பாடப்பிரிவுக்கும் போட்டி உள்ளது. பல்கலைக்கழக இளங்கலை
தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதால் விண்ணப்பம் பெறுபவர்கள் எண்ணிக்கை அடுத்து
வரும் நாட்களில் மேலும் உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து
கல்லூரி முதல்வர் பார்வதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை ராணி அண்ண அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அலுவலகத்தில் சமர்பிக்க கடைசி தேதி 13.7.2017 ஆகும். இதற்கான சேர்க்கைக்கு முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 19.7.2017 அன்றும் 2ம் கட்ட கலந்தாய்வு 21.7.2017 அன்றும் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment