மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 19 July 2017

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் முப்பெரும் விழா



 பாவூர்சத்திரம் அருகே உள்ள மருதடியூர் மேல்மருவத்துர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

மருதடியூர் மேல்மருவத்துர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழா, பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா, மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கு வழிபாட்டு மன்ற தலைவர் சக்தி பொன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருமலை, வேல்முருகன், குட்டி, முருகன், குட்டி ஆகியோர்  முன்னிலை வகித்தார். பிரச்சார அணி இனை செயலாளர் ஆசிரியர் நம்பி இலவச கண்சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். 

இம்முகாமில் 135 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் 22 பேர் அறுவை சிகிச்சைக்காக நெல்லை அரவிந்த் கண் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். முகாமில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


No comments:

Post a Comment