திருநெல்வேலி மாநகரத்தின் நீர் ஆதாரத்தை காப்பாற்றும்
பொருட்டும் இம்மாநகரத்தை தூய்மை மாநகரமாக மாற்றுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும்
பொருட்டும் நமது நெல்லை மாவட்ட ஆட்சியர் திரு. சந்திப் நன்தூரி அவர்கள் “Mission Clean Up” தாமிரபரணி 2017 என்ற திட்டத்தை 16.7.2017 அன்று துவக்கி வைத்தார்.
இதன் மூலம் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை
சுத்தம் செய்யும் பணியில் பிரான்சிஸ் சேவியர்
பொறியியல் கல்லூரியின் 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டு
கர்ப்பன்துறை ஆற்றின் இடது புற கரையோரத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
முன்னதாக மக்கள் மத்தியில் தாமிரபரணி ஆற்றினை சுத்தமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும்
வைக்க வழிவுறுத்தி நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி
முழக்கமிட்டு பேரணி மேற்கொண்டனர்.
பின்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த
விழாவில் மாணவர்கள் உற்சாகமாக நடனம், பாடல் மற்றும் சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று காண்போர் கண்களுக்கு
விருந்தளித்தனர்.
தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்
திட்ட நிகழ்ச்சி ஓருங்கினைப்பாளர் திரு. சதீஷ் குமார் அவர்களை கல்லூரி முதல்வர் முனைவர்.
திரு. இளங்கோவன், கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment