மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 28 July 2017

இந்திய சுற்றுலாத்துறையில் தமிழம் முதலிடம் : அமைச்சர் வெல்ல மண்டிநடராஜன் பெருமிதம்.





இந்தியாவில் சுற்றுலாத்துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என குற்றாலத்தில் நடந்த சாரல் விழா துவக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார். நெல்லை மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் சாரல் திருவிழா துவக்க விழா நடந்தது. 

விழாவிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை வகித்தார். எம்.பி.,வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.,செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வரவேற்றுப் பேசினார். 

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கேற்றி சாரல் திருவிழாவை துவக்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் 40 இடங்கள் சுற்றுலா ஸ்தலங்களாக திகழ்கின்றன. மலைவாசல் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, புராதன சிற்பங்கள் சுற்றுலா, படகு குழாம் சுற்றுலா, வனவிலங்கு சரணாலய சுற்றுலா என அவை வகைப்படுத்தப்படுகின்றன. இந்திய சுற்றுலாத்துறையில் அதிக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது தமிழக சுற்றுலாத்துறைதான். இந்திய சுற்றுலாத்துறையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. சுற்றுலா ஸ்தலங்களுக்கு வியாபார நோக்கத்தோடும் மக்கள் வருகின்றன். எந்த மதம் சார்ந்தவர்களையும் எளிதில் ஈர்த்து வருவது சுற்றுலா ஸ்தலங்கள். உடல் நலத்தை பேணவும் பொதுமக்கள் சுற்றுலா செல்கின்றனர். 


தமிழகத்தில் சுற்றுலா சிறந்து விளங்குவதற்கு இங்கு போக்குவரத்து வசதி அருமையாக இருக்கிறது. சாலைகள் சீராக உள்ளன. மின் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மிக முக்கியமாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி அவர்கள் சுற்றுலா ஸ்தலங்களுக்குச் சென்று வருகின்றனர். குற்றாலம் சிறப்பான சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.. குற்றாலத்திற்கு சமீபத்தில் நான் வந்தபோது இங்கு என்னென்ன தேவைகள் என்பதை அறிந்தேன். இதுகுறித்து முதல்வரிடம் கூறினேன். குற்றாலத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முதல்வர் உறுதியளித்துள்ளார். குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் அடுத்த ஆண்டுக்குள் புனரமைக்கப்படும்.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை புனரமைக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் சுற்றுலாத் தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது என்றார். 

வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் ஆகிய துறைகளின் மூலம் 129 பயனாளிகளுக்கு 59 லட்சத்து 40 ஆயித்து 235 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கி பேசும் போது... தமிழகத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களில் வெவ்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. குற்றால அருவிகளில் குளித்தால் உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கிறது. குற்றாலம் வந்து சீசனை அனுபவித்தால் பிரச்னைகள் பஞ்சாக பறந்து விடும். குற்றாலம் வந்தால் மனக்கவலைகள் நீங்கி புத்துணர்வு பெறலாம் என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ..இன்பத்துரை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய  ணைத் தலைவர் கண்ணன், தாய்கோ வங்கி மாநில துணைத் தலைவர் குற்றாலம் சேகர், தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாப்புலர் முத்தையா, ஆவின் தலைவர் ரமேஷ், நெல்லை சுதா பரமசிவன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் லிங்கராஜ், மின்வாரிய செயற்பொறியாளர் அருள், தென்காசி ஏ.எஸ்.பி. மணிகண்டன், பி.ஆர்.ஓ,சீனிவாசன், ஏ.பி.ஆர்.ஓ. ஜெகவீர பாண்டியன், அ.தி.மு.க.மாவட்ட முன்னாள் செயலாளர் கே.பி.குமார் பாண்டியன் மற்றும் ;பலர் கலந்து கொண்டனர்.கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment