நெல்லை இன்னர்வீல் கழகமும், மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் விங்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில, தேசிய யோகாசன போட்டிகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் சர்வதேச அளவில் யோகாவில் சிறந்ததாக தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி
மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் செந்தில்
பிரகாஷ், இயக்குநர் திலகவதி, முதல்வர் சோம சுந்தரி ஆகியோர்
வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளி தாளாளர் கூறுகையில்... யோகா சிறந்த உடற் பயிற்சியாகும். தினமும் யோகா செய்வதன் மூலம் உடலாலும்
உள்ளத்தாலும் பலம் அடைகிறோம். தொடர்ந்து மாணவர்கள் பல வெற்றிகளை அடைய வேண்டும் என்றார்.
விழாவில் பள்ளி மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி
மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment