தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளாக பள்ளிகளுக்கான தடகள போட்டியில் தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
சாதனை
வண்ணார்பேட்டை தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டியில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளாக ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்து வருகிறது. மொத்தம் 42 பள்ளிகள் கலந்து கொண்ட இத்தடகளப் போட்டியில் 108 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பெற்று கோப்பையை வென்றது. 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 8ம் வகுப்பு மாணவன் சந்துரு தனி நபர் சாம்பியன் பட்டத்தையும். 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவன் தர்மராமலிங்கம் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்;வர் திருமதி. மெணன்டஸ் மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி. ரீட்டா பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். ஸ்காட் குழுமங்களின் தலைவர் முனைவர் கிளிட்டஸ்பாபு அவர்கள் சாதனை படைத்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி துறை ஆசிரியர்களையும் பாராட்டினார்.
No comments:
Post a Comment