மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 4 July 2017

ஜான்ஸ் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.



கல்லூரி பொருளாதாரத் துறை மற்றும் ஆய்வு மையம் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் குமாரவேல் துவக்கி வைத்தார். அமெரிக்காவின் ஆண்டர்சன் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் பெலிலர் போஸ், ‘பணமில்லா பரிவர்த்தனை இந்தியாவில் எவ்வாறு சாத்தியம்’ என்ற தலைப்பில் பேசினார்.

துறைத் தலைவர் தார்சிஸ் ஆல்பின், குற்றாலம் பராசக்தி கல்லூரி பொருளாதாரத்துறைத் தலைவர் கயற்க கண்ணி, தூத்துக்குடி காமராஜர் கல்லூரி இணைப் பேராசிரியர் மதன காமராஜ், சேவியர் கல்லூரி இணைப் பேராசிரியர் தேவராஜ், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி உதவிப் பேராசிரியர் சரவணன் உள்ளிட்ட பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்பட்டன.


இதற்கான ஏற்பாடுகளை பொருளாதார துறைத் தலைவர் கதிரவன், உதவிப் பேராசிரியர் டேவிட் ஞானராஜ், ஏஞ்சல், அனிலா, ராபர்ட், ஜெயபால், அமல்ராஜன், ஆரோன், ஜேசுமாணிக்கராஜ், கிளாடிஸ், சுரேஷ், சொர்ணமாரி மற்றும் துறை மாணவர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment