சென்னை பெசன்ட்
நகரில் உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில்
பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ஜிகா வைரஸ்
பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படாது என்றார். ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சமடைய
வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். டெங்கு, சிக்குன்குனியா போல ஜிகா வைரஸ் உயிரிழப்பை
ஏற்படுத்த கூடியது அல்ல.
கொசுவினால் இந்த
வைரஸ் பரவுவதாக குறிப்பிட்டார். ஜிகா வைரஸால் பொதுமக்கள் பீதியோ, அச்சமோ அடைய தேவையில்லை. உயிர் இழப்பு எந்த
நேரத்திலும் ஏற்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். எனினும் அரசு ஆரம்ப
சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ மனைகளிலும் மருந்து, மாத்திரைகள் தேவையான அளவுக்கு இருப்பு
வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

No comments:
Post a Comment