மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 10 July 2017

நம் உரத்தசின்தனை திருநெல்வேலி வாசகர் வட்டம், பொருநை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய இலக்கிய மாலை



நம் உரத்தசின்தனை திருநெல்வேலி வாசகர் வட்டம், பொருநை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய இலக்கிய மாலை நடந்தது.

நெல்லை டவுண் வங்கி ஊழியர்கள் நலச்சங்க கட்டிடத்தில் வைத்து நம் உரத்தசின்தனை திருநெல்வேலி வாசகர் வட்டம், பொருநை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய இலக்கிய மாலை நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு தியாகராஜன் இறைவணக்கம் பாடினார். உரத்தசின்தனை நெல்லை வாசகர் வட்ட தலைவர் பொருநை பாலு வரவேற்புரை ஆற்றினார். முனைவர் வேலம்மாள் முத்தையா, நடுவர் பாமணி, மற்றும் சந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருநை இலக்கிய வட்ட தலைவர் தளவாய் நாதன் தலைமை வகித்தார். 

அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு கவியரங்கத்திற்கு நம் உரத்தசின்தனை மாத இதழின் நிர்வாக ஆசிரியர் கவிஞர் தொலைப்பேசி மீரான் தலைமை தாங்கினார். இதில் முனைவர் உஷாதேவி, இராமமூர்த்தி, செல்வமணி, பிரபு, தச்சைமணி, அருணா, சுப்பிரமணியன், சக்தி வேலாயுதம் மற்றும் தாணப்பன் ஆகியோர் பங்கேற்றனர். 

அதனை தொடர்ந்து அண்மையில் நூல்கள் வெளியிட்ட தமிழ்த் தொண்டர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சக்தி வேலாயுதம், இராமமூர்த்தி, செல்வமணி, கோவில்பட்டி சிவானந்தம் ஆகியோர் பார்ரட்டப்பெற்றனர். 

இந்நிகழ்ச்சியில் தமிழக அரசினால் தமிழ் செம்மல் விருது பெற்ற திருமதி. முனைவர் வேலம்மாள் முத்தையா அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. உரத்தசின்தனை நெல்லை வாசகர் வட்ட செயலர் சிவசங்கரன் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி நிகழ்ச்சியின் நிறைவாக நன்றி கூறினார்.



No comments:

Post a Comment