ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அக்னி
ஏவுகணையின் மாதிரி நிறுவப்பட்டது. ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பனி நடந்து வருகிறது.
இம்மண்டபம் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான வரும் 27ம் தேதி மக்கள்
பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி நிகழ்ச்சியில்
பங்கேற்று மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
கட்டுமான பணி மற்றும் திறப்பு விழா
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
செய்து வருகிறது. ஏவுகணையின் மாதிரி 21 மீட்டர் உயரம், 13 மீட்டர் விட்டம்
மற்றும் 12000 கிலோ எடையில்
ஸ்டீலால் செய்யப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் பின்புறம் மாதிரி நிறுத்தி
வைக்கப்படவுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக இதற்கு வண்ணம் பூச்சும் பணி நடந்து
வருகிறது.

No comments:
Post a Comment