மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 19 July 2017

தூய இக்னேசியஸ் கல்வியியல் கல்லூhயில் விழிப்புணர்வு நிகழ்ச்சி



இந்திய அரசு, கள விளம்பரத்துறை, திருநெல்வேலி சார்பில் பாளையங்கோட்டை தூய இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரியில் மின்னணு பணபரிமாற்றம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி

 பாளையங்கோட்டை, ஜூலை 19: பாளையங்கோட்டை தூய இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரியில்; இந்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கள விளம்பர துறை, திருநெல்வேலி சார்பில் மின்னணு பணபரிமாற்றம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் முனைவர் சகோதரி நிர்மலா தேவி தலைமைதாங்கினார். திருநெல்வேலி கள விளம்பர துறை உதவி அலுவலர் திரு.ஜெ.போஸ்வெல் ஆசீர் நோக்கவுரை ஆற்றினார்.


 நிகழ்ச்சியில் பணமில்லா பரிவர்த்தனை, மின்னணு பணபரிமாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம், கல்வி கடன் திட்டம் மற்றும் முத்திரா திட்டம் குறித்து பாண்டியண் கிராம வங்கி நிதிசார் கல்வி ஆலோசகர் திரு.மகாலிங்கம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூய இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment