மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 18 July 2017

ஆடி மாதம் முதல் செவ்வாய்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு



ஆடி மாதம் முதல் செவ்வாய்கிழமை அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் பெண்கள் விரதம் மேற்கொண்டு குடும்ப நன்மை வேண்டி அம்மன் கோயில்களில் மாவிளக்கு, எள்தீபம், நெய்விளக்கு, எலுமிச்சை விளக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

நேற்று ஆடி மாத முதல் செவ்வாய் கிழமை என்பதால் வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயிலில் திரளான பெண்கள் குடும்ப நன்மை வேண்டி அம்மனை நினைத்து அரளி பூ வைத்து எலுமிச்சை விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இதே போல் நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோயில், நெல்லையப்பர் கோயில் காந்திமதி அம்மன் சன்னதி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment