திருநெல்வேலி
மாவட்டம்,
செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் தமிழக அரசின்
சார்பில் வீரவாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா இன்று (17.07.2017) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பூ.முத்துராமலிங்கம் அவர்கள்
கலந்து கொண்டு, வீரவாஞ்சிநாதன்
அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்க. தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பேசியதாவது-
திருநெல்வேலி
மாவட்டத்தில் பிறந்த வாஞ்சிநாதன் நாட்டின் சுதந்திரத்திற்காக இன்னுயிரை துறந்தவர்.
வீரவாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா, மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தியாகிகளின் தினத்தினை
வீரவாஞ்சிநாதன் பிறந்த தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார்கள். அதன் அடிப்படையில்
அரசின் சார்பில் கடந்த ஆண்டு முதல் பிறந்த நாள் விழா கொட்டப்பட்டு வருகிறது.
கடந்த
ஆண்டைப்போல இவ்வாண்டும் வீரவாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா தியாகிகள் தினத்தினை
முன்னிட்டு, இன்று
கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றுகளை
மாணவ,
மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில்
கலந்து கொள்வதன் மூலலம் வரலாறுகளை அறிந்து கொள்ளமுடியும். மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் சுதந்திர வரலாறுகளை தெரிந்து
கொள்வதுடன் கல்வியிலும் சிறந்து விளங்கி, நாட்டிற்கும் வீட்டிற்கும் பெறுமை சேர்த்திட வேண்டுமென
பேசினார்.
இவ்விழாவில், எஸ்.எம்.சி.எஸ். செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளி, சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில், தென்காசி கோட்டாட்சியர் திரு.ராஜேந்திரன், செங்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் திரு.மோகனசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.ஜெகவீரபாண்டியன், செங்கோட்டை வட்டாட்சியர் திரு.மோகன், மாவட்ட கல்வி அலுவலர் திரு.சுடலை, நாட்டுநலப்பணித்
திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திருமதி.டி.வி.ஜீவா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment