மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 22 July 2017

சங்கர் மேல்நிலைப்பள்ளியில் இருபெரும் விழா நடைப்பெற்றது.

            


    சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் தேசிய  பசுமைப்படை சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா ,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஆகிய இருபெரும் விழா நடைப்பெற்றது. பள்ளி செயலாளர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை உதவி பொது மேலாளர் (மனிதவளம்) இரா.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை குடிமக்கள் நுகர்வோர் மன்;றம் மற்றும் தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர் கவிஞர். கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார்.

                பள்ளி தலைமையாசிரியர் உ.கணேசன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை இந்தியா சிமெண்ட்ஸ் உபதலைவர் (கல்வி) முனைவர் எஸ்.வெங்கட்ராமன் கலந்து கொண்டு பரிசளித்து சிறப்புரையாற்றினார்.

                சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 6,7,8 ஆம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு “இயற்கையை நேசிப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், 9,10 வகுப்பிற்கு ‘சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு மாணவர்களின் பங்கு” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் , 11,12 ஆம் வகுப்பிற்கு “புவி வெப்ப பாதிப்பும் நிவர்த்தி செய்யும் வழி முறைகளும் “என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது.

                காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 6,7,8 ஆம் வகுப்பிற்கு காமராஜரின் கல்விப்பணி என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், 9,10 ஆம் வகுப்பிற்கு காமராஜரின் சமூகப்பணி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், 11,12 ஆம் வகுப்பிற்கு ‘பெருந்தலைவரின் பெருமைகள்” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைப்பெற்றது.

                வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்தியா சிமெண்ட்ஸ் உபதலைவர் (கல்வி) முனைவர் எஸ்.வெங்கட்ராமன் பேசியதாது:-
நாடும் வீடும் சுத்தமாக இருக்க அரும்பாடுபட வேண்டும்


                நாடும் வீடும் சுத்தமாக இருக்க அரும்பாடுபட வேண்டும், மின் சிக்கனம், தண்ணீர் சிக்கனம் இப்போது மிக மிக அவசியம். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் சுத்தமாக இருந்தால் தான் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும். மரங்கன்று நட வேண்டும். தாய்மொழியோடு நின்று விடாமல் ஆங்கில அறிவும் பெற வேண்டும். பொது அறிவு பெருக நாளிதழ்கள், வார இதழ்கள் வாசிக்க வேண்டும். போட்டியில் பரிசு கிடைக்க வில்லை என்று வருத்தப்பட வேண்டாம். போட்டியில் பங்கு பெறுவதே முக்கியம். பாலீதின், பிளாஸ்டிக் போன்றவற்றின் பயன்பாட்டை அறவே ஒழித்து விட வேண்டும். மழைநீர் சேமிப்பு அவசியம் என்று பேசினார்கள். நிறைவாக பள்ளி உதவி தலைமையாசிரியர் ஆ.ரெங்கநாதன் நன்றி கூறினார்.         

No comments:

Post a Comment