நெல்லையில் திருக்குறள் பேச்சு போட்டி
மற்றும் ஓவிய போட்டியினை ஸ்ரீ ராம் சீட்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிய ஸ்ரீ ராம்
இலக்கிய கழகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவியரிடையே
நடத்தியது. இந்த போட்டியில் சுமார் 548 மாணவ , மாணவியர் பங்கேற்றனர்.
நெல்லை சாப்டர் மேல்நிலை பள்ளியில்
நடைபெற்ற இந்த போட்டிக்கு அதன் தொடக்க விழாவில் நிறுவனத்தின் மண்டல
மேலாளர் கேசவன் வரவேற்புரையாற்றினார் .சாப்டர் மேல்நிலை பள்ளியின் தலைமையாசிரியர்
ஓபேத் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார்
இந்த திருக்குறள் பேச்சு போட்டி
மற்றும் ஓவிய போட்டியானது இடைநிலை, உயர்நிலை,மேல்நிலை, மற்றும் கல்லூரி என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இடை நிலை பிரிவில் 6,7,8
ஆம் வகுப்பு மாணவ மாணவியரும் ,
உயர்நிலை பிரிவில் 9,10 ஆம் வகுப்பு மாணவ மாணவியரும் , மேல்நிலை பிரிவில் 11,
12 ஆம் வகுப்பு மாணவ மாணவியரும் , கல்லூரி பிரிவில் இளநிலை, முது நிலை பட்டப்படிப்பு, பொறியியல் ,
மருத்துவம், பாலி டெக்னிக் மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர். முதல் சுற்று ,அரை இறுதி சுற்று, இரண்டு நிலைகளாக பேச்சு போட்டி நடை பெற்றது. இறுதி சுற்று போட்டியானது சென்னையில் செப்டம்பர் 23 அன்று நடைபெற உள்ளது. ஓவிய
போட்டியானது ஒரே சுற்றாக மண்டல அளவில்
மட்டுமே நடத்தப்படுகிறது. பேச்சு போட்டியில் முதல் பரிசுகளை இடை நிலையில் லிட்டில்
பிளவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர் இசக்கியப்பன் வென்றார். உயர்நிலையில் நாடார் மேல்நிலை பள்ளி
மாணவர் கெளதம், மேல் நிலையில் டேனியல் தாமஸ்
மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவியும் ,
கல்லூரி அளவில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
மாணவர் முஹம்மது சம்சுதீன் பரிசுகளை
வென்றார்கள்.
ஓவிய போட்டியில் இடைநிலையில் இலஞ்சி
பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர் அந்தோணி ஷெரின் , உயர் நிலையில் சக்தி விநாயகர் இந்து
வித்யாலயா பள்ளி மாணவி இசக்கி
ராஜேஸ்வரியும், மேல்நிலையில் ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவர் லவனேஷ் மற்றும் கல்லூரியில் அன்னை ஹாஜிரா பெண்கள்
கல்லூரி மாணவி நாகலெட்சுமியும் பரிசுகளை வென்றார்கள்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காவல் துறை துணை
கண்காணிப்பாளர் முத்துக்குமார் கோப்பை மற்றும் விருதுகளை வழங்கி பேசுகையில் ,”
வளரும் தலைமுறையினருக்கு திருக்குறளின்
அவசியத்தை சொல்லி தருவதன் மூலம் அவர்களை சிறந்த தலைவர்களாக உருவாக்க முடியும்.
உலகத்திலே சிறந்த மொழி தமிழ் மொழி . அதனை பிழை இல்லாமல் பேச, கற்க , எழுதி படிக்க நமது குழந்தைகளுக்கு
சொல்லி கொடுக்க வேண்டும் . உலகத்திலேயே சிறந்து விளங்கும் திருக்குறளை நாம்
அனைவரும் முழுமையாக கற்று அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுசேரி
மாநிலத்தில் 10 மையங்களில் நடைபெறும் இந்த போட்டியின் இறுதி சுற்றில் ஒவ்வோரு பிரிவிலும் மாநில அளவில் முதல் மூன்று
மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு முதலாம் இரண்டாம், ,மூன்றாம் பரிசுகளாக ரூ.10,000, ரூ.7500, ரூ.5000 ரொக்கம் வழங்கப்படும் .. .
மேலும் முதல் பரிசு பெறும் மாணவரது பள்ளி/கல்லூரிக்கு ஒரு கேடயமும் வழங்கப்படும்.
ஓவிய போட்டியில், மண்டல அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு
கோப்பைகள் வழங்கப்படும்.
மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின்
கருத்துக்களை பரப்பவும் , தமிழாற்றலை வளர்க்கவும், பேச்சாற்றலை பெருக்கவும் , கடந்த 1988
முதல் 30 ஆண்டுகளாக ஸ்ரீராம் இலக்கிய கழகம் தமிழகம் மற்றும் புதுவையில்
திருக்குறள் போட்டியினை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment