மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Sunday, 2 July 2017

நெல்லையில் டோஸ்ட்மாஸ்டர்ஸ் பட்டயமளிப்பு விழா.



டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பானது லாப நோக்கமற்ற அமைப்பாகும். 142 நாடுகளில் 16,000 குழுமமாக இது அமைந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியரை மேம்படுத்தி ,பொது இடங்களில் பேசும் திறனை வளர்த்தும், அவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், இண்டர்வீயூ மற்றும் குரூப் டிஸ்கஷன் ஆகியவற்றில் முதன்மை பெறவும், தலைமை பண்புகளை கற்று கொடுக்கவும், அவர்களை உயரிய நிலைக்கு கொண்டு செல்லும் அமைப்பாக இது விளங்குகின்றது. சென்னை, பெங்களூரு,மதுரை, விருதுநகர் அடுத்து நெல்லையிலும் தற்போது  துவக்கப்பட்டுள்ளது.  

நெல்லை டவுண்  பார்வதி சேஷ மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஈஸ்வர் அனைவரையும் வரவேற்றார். இயக்குனர் மாலா பாலசுப்ரமணியன், மைதிலி ரமணன், சுகந்தி பெரியசாமி, பிரசன்ன வெங்கடேஷ்,சசிதரணி,சுந்தர் சொர்ணேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 திருநெல்வேலி டோஸ்ட்மாஸ்டர்ஸ் பட்டயமளிப்பு   விழாவில் நெல்லை மாவட்டஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு  இதன் அவசியத்தை எடுத்துரைத்து,  இந்த அமைப்பின் புதிய பட்டய தலைவராக தேர்வு பெற்ற  ராம்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். செயலாளராக சுப்பிரமணியமும், கல்வி பிரிவு துணைத்தலைவராக ஸ்ரீ நிதியும் , பொருளாளராக சங்கரியும் தேர்வு செய்யப்பட்டனர்.


நெல்லை மாவட்டஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி பேசுகையில்,"நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த அமைப்பும் இருந்தது. தற்போது நெல்லை மாவட்டத்தில் இதை நான் இங்கு  துவங்கி வைப்பதில் பெருமை படுகிறேன். இந்த அமைப்பை நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் துவங்க வேண்டும். இந்த அமைப்பில் மாணவ மாணவிகள் சேர வேண்டும்.சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய மாணவ,மாணவிகள் படிக்கும்போதே தங்களை மேம்படுத்தி கொள்ளவும் இதில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் "  என தெரிவித்தார். 


இந்த நிகழ்ச்சியில் சிறந்த முறையில் தங்கள் பேச்சு திறனை வெளிப்படுத்திய மாணவ,மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தனிஷ்க் ஹரிகிருஷ்ணன் , பரமசிவன்,அந்தோணி பாபு, சங்கரசுப்பு, அரவிந்த், சுப்ரமணியன்,வினோத் பாபு சிவரஞ்சனி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment