அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் கீழப்பாவூர் வட்டார வளமையத்தில் 0-18 வயதுள்ள மாற்றுத் திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு செல்வ மோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து மருத்துவமுகாமினை தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமாரி லதா வரவேற்றார்.
தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை முன்னிலை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்கம், உதவி திட்ட அலுவலர் சேது சொக்கலிங்கம், த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் வனிதா தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் செல்வமீனாட்சி நன்றி கூறினார்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இம்மருத்துவ முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக 154 மாற்றுத்திறன் மாணவர்களும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பாக 36 மாற்றுத்திறன் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவ முகாமில் மனநல சிறப்பு மருத்துவர் நிர்மல், கண் மருத்துவர் இசைவாணி கண் பரிசோதனை தொழிற் நுட்புனர் பைசல் ரகுமான், காது, மூக்குஇ தொண்டை சிறப்பு மருத்துவர் அமுதா இ எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர் பிரின்ஸ் ரஜினிகாந்த், பேச்சு மற்றும் கேட்டல் திறன் பரிசோதகர் தனலட்சுமி ஆகியோர்கள் கலந்து கொண்டு 24 மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நல அடையாள அட்டை, 18 மாணவர்களுக்கு கண் கண்ணாடி, 4 மாணவர்களுக்கு காது ஒலி கருவி, 9 மாணவர்களுக்கு சக்கர நாற்காலி, மேலும் 16 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பராமரிப்பு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கும் 35 மாணவர்களுக்கு இலவச பாதுகாவலர் பஸ்பாஸ் மற்றும் 37 மாணவர்களுக்கு இலவச இரயில் பாஸ் வழங்கப்பட்டது.
மேலும் தென்காசி, ஆலங்குளம் மற்றும் வீகேபுதூர் பகுதியை சேர்ந்த துணை வருவாய் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தற்காலிக வருமானச் சான்று வழங்கினர்.
மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேநீர் ,மதிய உணவு மற்றும் பயணப்படி வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment