மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 4 July 2017

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி அம்பாள் திருவீதி உலா







நெல்லையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

அதேபோல் இந்த வருடம் நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1௦ நாட்கள் திருவிழா நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் இன்னிசை நிகழ்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. 

அதேபோல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருவர். அதன்படி 5 ம் திருநாள் அன்று சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் திருவீதி உலா வந்தனர். முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் தரிசனம் செய்தனர். 

No comments:

Post a Comment