மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 11 July 2017

அருள்மிகு வெயிலுமுகந்தம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி.








உதயநேரி கட்டளை அருள்மிகு வெயிலுமுகந்தம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.  பாலாமடை  உதயநேரி கட்டளை அருள்மிகு வெயிலுமுகந்தம்மன் திருக்கோயிலில்  வருஷாபிஷேக விழாவினை  முன்னிட்டு இன்று  காலை  8.00  மணி  அளவில் உதயநேரி பிள்ளையார்  கோவிலிருந்து  பெரிய மாட்டுவண்டி மற்றும்  சிறிய மாட்டுவண்டி பேட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு நுழைவு கட்டணமாக பெரிய வண்டிக்கு ரூ700, சிறிய வண்டிக்கு ரூ.500ம் செலுத்தப்பட்டு 15க்கு மேற்பட்ட வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியை  மாட்டுவண்டி போட்டியினை பெரிய  மாட்டுவண்டி பந்தையத்தை கட்டளை கருப்பசாமி லாரி சர்விஸ் அதிபர் மயில் (எ)பாலசுப்பிரமணியன் துவக்கிவைத்தார், சிறிய மாட்டுவண்டி போட்டியினை மராட்டிய  மாநில  தேவர் பேரவை  தொழில் அதிபர்  அங்கங்கப்பன்  துவக்கி வைத்தார். இந்த  போட்டியில் பெரிய  மாட்டுவண்டியில் முதல் பரிசினை  ரூ 20,000 தொழில் அதிபர் மயில் (எ) பாலசுப்பிரமணியன்  வெற்றிபெற்றவருக்கு வழங்கினார்.  இரண்டாம் பரிசாக ரூ.15000  மாவட்ட  எம்ஜிஆர் மன்ற இணை  செயலாளர்  கட்டளை ஊராட்சி செயலாளருமான  அன்பு வெற்றி  பெற்றவருக்கு வழங்கினார். மூன்றாவது பரிசாக  ரூ.10,000  பாரதிய ஜன  மாவட்ட  அமைப்பு  சாரா  துணை தலைவர் சுபாஷ்சந்திரபோஸ்  வெற்றி  பெற்றவருக்கு வழங்கினார்.  சிறிய மாட்டுவண்டி போட்டியில்   ரூ.15,000  மராட்டிய  மாநில தேவர் பேரவை  தொழில்  அதிபர்  அங்கங்கப்பன் வெற்றி  பெற்றவருக்கு வழங்கினார்.  இரண்டாம் பரிசாக  உதயநேரி தொழில் அதிபர் கணேசன் பிள்ளை  பெற்றவருக்கு வழங்கினார். மூன்றாம்  பரிசாக  சீறிவரும் சுனாமி குரூப் வெற்றி  பெற்றவருக்கு வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் பெரிய மாட்டுவண்டி பிரிவில் முதல் கொடி  வாங்கும் சாரதிக்கு தொழில்  அதிபர் ஆவுடையப்பன் குத்துவிளக்கு  வழங்கினார்.  சிறிய மாட்டுவண்டி  பிரிவில்  முதல்  கொடி வாங்கும் சாரதிக்கு ராம உதவியாளர்  கோமு குத்துவிளக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியினை   உதயநேரி கட்டளை விழா கமிட்டியாளர்கள்  மற்றும்  பொது மக்கள் விழாவை சிறப்பாக  செய்திருந்தனர்.      

No comments:

Post a Comment