மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 24 July 2017

வள்ளியூரில் அம்பேத்கர் போக்குவரத்து தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா




நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அம்பேத்கர் போக்குவரத்து தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 27-ந் தேதி தி.மு.க. சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். அன்றைய தினம் கடலூரில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் நான்  கலந்து கொள்கிறேன். மக்களின் பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற அடிப்படையில் தி.மு.க.வின் அழைப்பை ஏற்று இந்த போராட்டத்தில் பங்கேற்கிறோம். 

மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினையில் இடதுசாரிகள் உள்பட அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். தாமிரபரணி ஆற்றின் அருகே நினைவிடம் அமைக்க வேண்டும். 

No comments:

Post a Comment