தருவையில் அமைந்துள்ள FX தொழில்நுட்பக் கல்லூரியில் 2017 – 2018 ம் ஆண்டிற்கான
முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு
ஸ்காட் கல்வி குழும பொது மேலாளர் (நிதி) திரு. இக்னேசியஸ் சேவியர் தலைமை தாங்கி
ஒரு மனிதன் நூலை எவ்வாறு விடுகின்றானோ அதை வைத்து தான் பட்டம் மேலே பறக்கிறது
அதுபோலதான் ஆசிரியர்கள் நூலாக இருந்து மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக
இருக்கின்றனர் என்று சிறு கதையின் மூலம் விளக்கினார்.
FX கல்லூரி முதல்வர் திரு.
டி.பி. ரூபஸ், நிர்வாக அதிகாரி முனைவர் மைக்கல் பொன்ராஜ் மற்றும் ஸ்காட் குழும
சேவை பிரிவு இயக்குனர் திரு. சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக
இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ஜெனிஷ் ஜேசு பாலன் வரவேற்புரை
ஆற்றினார். கல்லூரியின் முதலாம் ஆண்டு துறைத்தலைவர் திரு. சங்கர நாராயணன் நன்றி
கூறினார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பாக
செய்திருந்தனர்.





No comments:
Post a Comment