நாட்டில் அடிப்படை கல்வியின்
தரம் மிகவும் மோசமடைந்து வருவதால், அடுத்த கல்வி ஆண்டு முதல் 8-ம்
வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
கல்வி உரிமை சட்டம்-2009-ன் படி
8-ஆம் வகுப்புவரை எந்த மாணவ, மாணவியையும் ‘தேர்ச்சி பெறவில்லை’ என்று நிறுத்தி வைக்கவோ அல்லது
பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது என்று கூறுகிறது. இதன்படி, 8-ம் வகுப்புவரை, அனைத்து மாணவ, மாணவிகளும் ‘அனைவரும் தேர்ச்சி’ செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
திரிபுரா மாநில தலைநகர்
அகர்தலாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘அனைவரும்
தேர்ச்சி’ திட்டத்தால், நாட்டில் அடிப்படை கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெரும்பாலான
மாநிலங்கள் முறையிட்டுள்ளன. எனவே, கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல், ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தை திரும்ப பெறுவது என்று ஒருமனதாக முடிவு
செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

No comments:
Post a Comment