மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 17 July 2017

நெல்லை மேற்கு மாவட்ட காங் கட்சி சார்பில் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


      
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நெல்லை மேற்கு மாவட்ட காங் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 115 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 விழாவிற்கு கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்  தலைவர் எஸ்ஆர் பால்துரை தலைமை வகித்தார். இலக்கிய மன்ற தலைவர் செல்வன், மாவட்ட காங் துனை தலைவர் பாவநாசம், மாவட்ட வர்த்தக காங் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், துரைசாமி மாவட்ட செயலாளர் ஆறுமுகபாண்டி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் பொன்கணேசன ஆகியோர் முன்னிலை வகித்தனா  பாவூர்சத்திரம் நகர தலைவர் ஏசுஜெகன் வரவேற்று பேசினார்.  நெல்லை மேற்கு மாவட்ட காங் கட்சி தலைவர்  பழனிநாடார்  காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  புpன்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


விழாவில்  முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, தமிழ்மணி,   பொன்மோகன் ராஜ், தாமஸ் டேவிட், காங் தொழிற்சங்க தலைவர் முத்தையா, தர்மராஜ்,  திருமலைசாமி, குமரேசன். தவசிமுத்துதங்கராஜ், பால்என்ற சண்முகவேல், ஜெயராஜ், அண்ணாமலை, தங்கதுரை, ஆனந்த், சண்முகம், மேகநாதன், நடேசபூபதி தேவேந்திரன், தர்மர், அருணாசலம், சத்தியமுர்த்தி, கணேசன், மலையப்பன், காமராஜ், சீனிவாசன், வில்சன், பிரபு, பாண்டியன், ஆறுமுகம், ராசையா, சமுத்திரபாண்டி, ஒளிவுநாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மோகன் நன்றி கூறினார்.  

No comments:

Post a Comment