நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையும்
கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் 2ம் ஆண்டு நினைவு
தினத்தில் அரவிந்த் கண்மருத்துவமனையில் 500பேர் கண்தானம் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனையின் துணை தலைமை மருத்துவர்
மீனாட்சி முன்னிலை வகித்தார் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கிராம உதய நிறுவனர் சுந்தரேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 500 பேர் கண்தானம்
வழங்கும் உறுதிமொழி படிவத்தை அரவிந்த் கண் மருத்துவமனையின் துணை தலைமை மருத்துவர்
மீனாட்சியிடம் வழங்கினார்.
மயிலோசை பல்சுவை இதழின் ஆசிரியர் அரிமா மயூரி ஆறுமுகநயினார் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டார். மேலும் அரவிந்த் கண்மருத்துவமனை கண்தான பிரிவு ஒருங்கிணைப்பாளர்
சாரதா, கிராம உதய தன்னார்வ தொண்டர் பாலசுப்பிரமணியன், கிராம உதய பகுதி பொறுப்பாளாகள் முருகன், கணேஷன், மயிலோசை நிகழ்ச்சி தொகுப்பாளர் வினோத் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில்
கண்தானம் வழங்கியவர்கள் உட்பட மகளிர் சுயஉதவி குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment