பாளை அண்ணா விளையாட்டரங்கில்
வருகிற ஜூலை 13ல் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இது குறித்து மாவட்ட விளையாட்டு
அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் விடுத்துள்ள செய்திகுறிப்பு...
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையம் நெல்லை பிரிவு சார்பில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் ஜூலை 13ம் தேதி அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. இதில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தடகளம், நீச்சல், கால்பந்து
மற்றும் கைப்பந்து ஆகிய
விளையாட்டு போட்டிகள் தனித்தனியாக நடக்கிறது. நெல்லை மாவட்டத்தை சார்ந்த பள்ளி
மாணவ, மாணவிகள் பங்கேற்லாம்.
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒவ்வொரு
பிரிவிலும் ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவ அணியும், மாணவியர் அணியும் கலந்து
கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியரிடமிருந்து பள்ளியில் படிப்பதற்கான சான்றிதழுடன்
காலை 8 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கிற்கு வர வேண்டும்.
தனி நபர், குழு விளையாட்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை
பெறுபவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்க
விருப்பமுள்ளவர்கள் ஜூலை 8ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு
அலுவலர், பாளை அண்ணா விளையாட்டரங்கம், நெல்லை-2 என்ற முகவரியில் நேரில் அல்லது மின் அஞ்சல் (dsotnv@gmail.com ) முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment