மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 11 July 2017

சிறுமியை கடித்து குதறிய தெருநாயால் பரபரப்பு.



வி.கே.புரத்தில் தெருநாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த சிறுமி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். இவரது மனைவி உமாமாரி. இவர்களுக்கு புவனேஸ்வரி (7). இசை வாணி (4) என்ற இரு மகளும். ஒன்றரை வயதில் அஜய் என்ற மகனும் உள்ளனர். நேற்று இசை வாணி வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த  லாரியின் கீழ் படுத்திருந்த தெருநாய் ஒன்று திடீரென சிறுமி இசைவாணியின் கன்னத்தை கடித்து குதறியது. இதனால் கன்னத்தில் பெரிய ஓட்டை விழுந்து ரத்தம் கொட்டியது.

இதில் சிறுமி இசை வாணி கதறி துடித்தாள். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த நாயை விரட்டி விட்டு சிறுமியை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

No comments:

Post a Comment