மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 17 July 2017

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் சார்பில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.



பாவூர்சத்திரம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.


    தமிழ்நாடு மெர்க்கன் டைல்வங்கி சார்பில்  ஆண்டுதோறும் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா ஏழை எளியோர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல்வங்கி பாவூர்சத்திரம் கிளை சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் முலம் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 

முகாமிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் சுரேந்திரன் தலைமை வகித்தார். பாவூர்சத்திரம் கிளை மேலாளர்      ஞானமருதப்பாண்டியன் முன்னிலை வகித்தார். அலுவலர் சுந்தர மகாலிங்கம் வரவேற்று பேசினார். அப்போது அலங்கரிக்கப்பட்ட காமராஜரின் உருவப்பட்த்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கபப்பட்டது. 

முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் அனிருத், அதிதி ஆகியேர் கலந்து கொண்டு நொயாளிகளுக்கு சிகிச்சi அழித்தனர். முகாமில் கலந்து கொண்ட 62 நோயாளிகளில் 27 பேர் இலவசமாக கண்புறை நோய் அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

முகாமில் வங்கி ஊழியர்கள் புவனேஸ்வரன், சஞ்சிவி, பூமா, கவிதா, மணிகண்டன், சக்திவேல், கருணாகரன், சதீஷ்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊழியர் அருண்குமார் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment