மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 24 July 2017

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்




தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இந்துக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதன் மூலம் அவர்களின் ஆசிகள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுகிழமையன்று  மக்கள் அதிகாலையில் எழுந்து ஆறு, குளங்களில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் புனித நீராடினால் தங்களுடைய பாவங்கள் தீரும் என்ற ஐதீகம் அடிப்படையிலும், அதிலும் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபாடு செய்து மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அதன்படி ஞாயிற்றுகிழமையன்று  அதிகாலையில் பாபநாசம் படித்துறையில் மக்கள் குவிந்தனர். அங்கு கோவில் முன்பாக ஓடும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, ஆற்றங்கரை படித்துறையில் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். 

பின்னர் அவர்கள் பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாசநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களின் வசதிக்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா மற்றும் பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகளையொட்டி பாபநாசத்தில் அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

இதே போல் குற்றாலம் மெயின் அருவிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று காலையில் இருந்து ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்கள் அருவியில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். 

No comments:

Post a Comment