குற்றாலம் சாரல் திருவிழாவில் யோகா நிகழ்ச்சி நடத்திய கலைஞர்கள் மற்றும் மாணவிக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.
இவ்விழாவில் தென்காசி வருவாய்
கோட்டாட்சியர் திரு.ச.ராஜேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும்
பராமரிப்பு செயற்பொ றியாளர் திரு.ஆர்.பாஸ்கரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு
சிறப்பாக யோகாசனம் செய்த கீழப்புலியூர் செயின்ட் மைக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
9ம் வகுப்பு மாணவி நந்தினிதேவிக்கும், நாகர்கோவில் வாழும் கலை யோகா கலைக்குழுவினருக்கும் பரிசுகளை
வழங்கினார்கள்.
இவ்விழாவில் திருநெல்வேலி தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் திரு.ரெ.சிதம்பரம், தென்காசி வாட்டாட்சியர் திரு.முருகன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கி.கணேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வள்ளி நாடகமன்றக் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி, யமுனா ஸ்டேஜ் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி, திரைப்படப் புகழ் மாற்றுத் திறனாளி பிரபு குழுவினரின் நடன நிகழ்ச்சி
உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


No comments:
Post a Comment