பள்ளிகளுக்கு இடையேயான குறு வட்ட அளவில் பல்வேறு
விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் வண்ணார்பேட்டை
புனித சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர்.
மேலும் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கால்பந்து போட்டியில் 2ம் இடம் பெற்றனர். மாணவன்
சாமி 14 வயதுக்குட்பட்ட பேட்மிட்டன்
போட்டியில் 2ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற் பயிற்சி
ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment