மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 11 July 2017

காந்திதாமில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவிப்பு.



பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் காந்திதாமில் இருந்து நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை உள்ள திங்கள்கிழமைகளில் காந்திதாமில் இருந்து மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் (09548) புறப்படும். மறுமார்க்கத்தில் இம்மாதம் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வரையுள்ள வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து காலை 7.45 மணிக்கு சிறப்பு ரயில் (09457) புறப்படும்.

இந்த ரயிலில் ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, மூன்று மூன்றடுக்கு ஏசிபெட்டி, எட்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில், வள்ளியூர்,  நாகர்கோவில் டவுண், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, திருச்சூர், சோரனூர், திரூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூர் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களின் நின்று செல்லும். இந்த ரயிலின் சேவை அறிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.


No comments:

Post a Comment